– நமது நிருபர் –
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக கூறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு டில்லியில் போராட்டத்தை துவக்கியது. 20 நாட்களாக அமைதியான முறையில் சென்று கொண்டிருந்த இந்த போராட்டம் நேற்று முன்தினம் வன்முறையாக வெடித்தது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்லிமென்டை நோக்கி செல்லுங்கள் என்று அந்த கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே அறிவுறுத்தினார். இதையடுத்து பல்லாயிரக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் பார்லியை நோக்கி ஓடத் தொடங்கினர். அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்த போலீசாருக்கும் அவர்களுக்கு மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் தாக்கியதில் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இப்படி போராட்டக்காரர்களை தூண்டி விட்ட அதன் தலைவர் பார்லியை நோக்கி சென்றாரா? அதுதான் இல்லை. அவருடன் இணைந்து போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் நிர்வாகிகளும் பார்லியை நோக்கி செல்லவில்லை. எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கம் பதுங்கிக் கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஒழுங்குபடுத்தப்படாத கும்பல், போலீசாரை எதிர்கொண்டதும், போலீசார் மீது கல் வீசியதும், ரயில்கள், பஸ் வாகனங்கள், மீது கல் வீசியதும் நடந்த நிலையில் பல இடங்கள் போர்க்களமாக மாறின. ஆனாலும் அந்த இடங்களுக்கு கரப்பான் பூச்சி கட்சித் தலைவர்கள் வரவில்லை.
முதலில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக தொடங்கிய அவர்களது போராட்டம் இப்போது வெவ்வேறு நோக்கங்களுடன் திசையின்றி சென்று கொண்டிருக்கிறது. மோடியை கொல்ல வேண்டும், இந்த ஆட்சியை அகற்ற வேண்டும், நேபாளம் போல புதிய ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் இஷ்டத்துக்கு கோஷம் எழுப்பி டில்லி வீதிகளில் இந்த கும்பல் திரிந்து கொண்டிருக்கிறது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் பார்லி கூட்டத் தொடரில் மதமாற்ற அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதை கட்டுப்படுத்தும் புதிய மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. பார்லியை முடக்கி அதை தடுப்பதும், இந்த போராட்ட கும்பலின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. எனவேதான் இத்தகைய திடீர் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகளும், உள்நாட்டில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் ரகசிய அமைப்புகளும் இணைந்துள்ளன.
இதுவே இவ்வளவு பெருங்கூட்டம் டில்லியில் திரண்டு அரசை எதிர்த்து கல் வீசுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதை உணர்ந்து தான் அரசு போராட்டக்காரர்களுக்கு பிடி கொடுக்காமல், அவர்களை டீல் செய்து வருகிறது.
இந்தியாவில் மதமாற்றத்தை தூண்டும் சர்வதேச அமைப்புகளுக்கும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் உள்நாட்டு கைக்கூலிகளுக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதுதான் வசதியானது. அத்தகைய நோக்கம் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்கின்றனர், இந்த திடீர் போராட்டத்தை உற்று கவனிக்கும் தேசியவாதிகள்.
