சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 22) சவரனுக்கு 1,680 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து 13,430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 20) ஆபரண தங்கம் கிராம் 13,150 ரூபாய்க்கும், சவரன் 1,05,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 235 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜூலை 21) தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 13,220 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, 1,05,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 240 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து, 2.40 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜூலை 22) சவரனுக்கு 1,680 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து 13,430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
