போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுமி உட்படப் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, டெல்லியில் போராட்டம் வலுத்து வருகிறது. போராட்ட களத்திற்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மேற்கு வங்கத்தில் இருந்த மத்திய ரிசர்வ் காவல் படை டெல்லிக்குத் திரும்பும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ரிசர்வ் காவல்படைகள் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே,போராட்டத்தில் கலந்துகொண்ட தொலைக்காட்சி நடிகர் செஹ்பான் அசிம் வெளியிட்டுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரபல ஊடகத்திடம் அவர் பேசும் போது, டெல்லியில் நடைபெற்ற கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தின் போது காவல்துறையின் தடியடியில் தான் காயமடைந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஜந்தர் மந்தரை அடைவதற்கு முன்பே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அப்போது மாணவர்களும், பெண்களும் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பேசிய செஹ்பான், மாணவர்களுக்கு ஆதரவாகவே தான் போராட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறினார். மேலும், மும்பையிலிருந்து தன்னுடன் வந்திருந்த இரண்டு பெண் தோழிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, காவல்துறையினரின் கடுமையான தாக்குதலில் தான் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார்.
இன்று வரை தொடர்ந்து போராட்டம் நீடித்து வருவதால், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. இந்நிலையில், கருப்பு சட்டை அணிந்து வந்த எதிர்கட்சியினர், அவையில் நீட் முறைகேடு குறித்து விவாதிக்குமாறு அமளியில் ஈடுப்பட்டதால் நாடாளுமன்றத்தில் அவை ஒத்திவைக்கப்பது. இதனிடையே, போராட்ட களத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
