சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கி. மணிவாசன் இன்று (22.07.2026) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருச்சி ஆயுதப்படை பிரிவின் துணைத் தலைவராக இருந்த எம். விஜயலட்சுமி, சென்னை ஊர்க்காவல் படை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆர். சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு (சிபிசிஐடி) மேற்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளராக இருந்த டி. சண்முகப்பிரியா, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் சென்னை மேற்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.ஆர். மீரா, சென்னை டிஜிபி அலுவலகத்தின் அலுவலக தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவின் உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணி இடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
