மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; டில்லி -டெல் அவிவ் விமான சேவை ரத்து செய்தது ஏர் இந்தியா

புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் பதற்றம் எதிரொலியாக புதுடில்லி-டெல் அவிவ் இடையேயான விமான சேவையை ஏர் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் நாட்கள் செல்ல, செல்ல வேகம் எடுத்துள்ளது. ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா மறுத்துவிட்டதால் மேற்காசிய நாடுகளில் நிலவி வந்த பதற்றம் மேலும் அதிகரித்து உள்ளது.

இந் நிலையில், புதுடில்லி-டெல் அவிவ் இடையே விமான சேவைகளை செப்டம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களே சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்படுகிறது என்று ஏர் இந்தியா கூறி உள்ளது.

ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பால் வேலை, விடுமுறை மற்றும் சொந்த அலுவல்களுக்காக இஸ்ரேல் செல்ல இருப்பவர்களுக்கு பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. விமான சேவை நிறுத்தம் காரணமாக, இஸ்ரேலில் வசிக்கும் 40000 இந்தியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Source link