“நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்”

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தில் கரப்பான் ஜனதா கட்சியின் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்கும் நோக்கில் காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு, தடியடி தாக்குதல், குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த சூழலில் டெல்லியில் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திரைத்துறையினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டார். இயக்குநர் பா.ரஞ்சித், வரலட்சுமி சரத்குமார், லெனின் பாரது உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளப் பக்கம் மூலமாக ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். 

இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் ஊழல், முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் துயர மர@ங்கள் நடந்து வருகிறது. டெல்லியில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்றார். 

Source link