மாணவர்களின் நலன், எதிர்காலமே முக்கியம்: பிரதமர் மோடி திட்டவட்டம்

புதுடில்லி: மாணவர்களின் நலன், எதிர்காலமே முக்கியம்; நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டின் இளைஞர்களின் நலனும் அவர்களின் எதிர்காலமுமே எங்களுக்கு முக்கியம்; நீட் தேர்வு உட்பட அனைத்து வினாத்தாள் கசிவு வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தி, குற்றவாளிகள் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவதை உறுதிசெய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

தேவையான நடவடிக்கைகளை உறுதிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைப்பவர்கள் யாரும் தப்பிக்க விடப்பட மாட்டார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source link