தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய் நடித்த கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக இன்று (23.07.2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல்வராக முதல் படம், சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
வழக்கம் போல் திரையரங்கில் பேனர், பட்டாசு, டிஜே கச்சேரி என நேற்று இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முதல்வர் விஜய் நேற்று இரவு சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் படம் பார்த்து மகிழ்ந்தார். இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் தொடங்கியது.
திரையரங்கில் விஜய் ரசிகர்களுடன் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், முகமது பர்வேஸ், ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பல்வேறு எம்.எல்.ஏ-க்களும் கண்டு களித்தனர். மேலும் திரைப்பிரபலங்களில் கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, மமிதா பைஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசித்தனர்.
