நீட் போராட்டத்தில் ஜனநாயகன் எங்கே வந்தது? தவெக vs திமுக என ரூட் மாறும் மாணவர்கள் போராட்டம் – no space for tvk vs dmk politics and jananayagan talks in students neet issue protest

நாடு தழுவிய அளவில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தமிழகத்திலும் எதிரொலித்து வருகிறது. ஆனால் தவெக, முதலமைச்சர் விஜய், ஜனநாயகன் திரைப்படம் உள்ளிட்ட விஷயங்களை உள்ளே கொண்டு வருவதாக சர்ச்சைகள் வெடித்துள்ளன. இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நீட் எதிர்ப்பில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது தமிழ்நாடு. அந்த அளவிற்கு வீரியத்துடன் கடந்த திமுக அரசு எதிர்ப்பை காட்டியது. இந்த சூழலில் சமீபத்தில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல மாதங்கள் கஷ்டப்பட்டு படித்து, நிறைய செலவு செய்து தேர்வு எழுதினால் வினாத்தாள் கசிந்துவிட்டது என்று கூறி மறுதேர்விற்கு ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு சுமையை கூட்டியுள்ளனர்.

விஸ்வரூபம் எடுத்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்

நீட் வினாத்தாள் கசிவு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25 நாட்களுக்கு மேலாக அமைதியான முறையில் நடந்த போராட்டம், கடந்த 20ஆம் தேதி போலீசார் நடத்தியதால் விஸ்வரூபம் எடுத்தது. அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தன. களத்திற்கே சென்று ஆதரவு தெரிவித்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் அமளியை ஏற்படுத்தும் வகையில் மாறியிருக்கிறது.

TVK GOVT vs DMK GOVT | Political Game Starts ? Party Fund க்கு CHECK வைத்த CM!

சென்னையில் மாணவர் அமைப்புகள் போராட்டம்

டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் கல்லூரி மாணவர்கள், பல்வேறு மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இவர்களை அப்புறப்படுத்தும் வேலைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் (ஜுலை 23) அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் வகுப்பு புறக்கணிப்பை அறிவித்துள்ளனர். இந்த சூழலில் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இதுதொடர்பாக சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீட் போராட்டத்தில் தவெக அரசியல்

அதில் பேசும் மாணவர்கள், மாணவர்களின் முக்கியமான நோக்கம் என்ன? நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும். அதுமட்டுமின்றி முறைகேடுகள் அற்ற வகையில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இங்கு ஜனநாயகன் படத்தை பற்றியும், முதலமைச்சர் விஜய் பற்றியும் விமர்சனங்களை வைத்து நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன. இதுதான் முதன்மையான நோக்கமாக இருக்கிறது. இந்த விஷயம் தவெக vs திமுக என மாறி வருகிறது. மாணவர்கள் போராட்டத்தில் எந்த கட்சியினரையும் அனுமதிக்க கூடாது.

மாணவர்கள் போராட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சு எதற்கு?

ஒருவேளை அனைத்து கட்சியினரும் ஈடுபட வேண்டும் என்று விரும்பினால், மற்ற கட்சிகளை பற்றி விமர்சிக்க வேண்டாம். அப்படி இருந்தால் தான் மாணவர்கள் போராட்டம் நல்லபடியாக அரங்கேறும். ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்தை உற்றுநோக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இங்கு நடைபெறும் மாணவர்கள் போராட்டமானது மிகவும் வீரியத்துடன் இருக்கும். எனவே முதலமைச்சர் விஜய்யை முன்னிலைப்படுத்தி போராட்ட களத்தில் எதுவும் பேச வேண்டாம். நம்முடைய மாணவர்களுக்காக, பிள்ளைகளுக்காக பேசுங்கள். போராட்டத்தில் அரசியல் கலக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

Source link