IND vs ZIM Live Score, 1st T2OI: தொடக்க ஜோடியை உடைத்த இந்தியா

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில், இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி ஹராரேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இன்று வியாழக்கிழமை மாலை 4:30 மணி முதல் தொடங்கி நடக்கிறது.

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் – ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் 

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்களாக பிரையன் பென்னட் – பென் கர்ரன் களமிறங்கினர். அணிக்கு வலுவான அடித்த போட வந்த இந்த ஜோடியில், இந்தியாவின் மயங்க் யாதவ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் கீப்பர் இஷான் கிஷன் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பென் கர்ரன் (0).

தற்போது களத்தில் பிரையன் பென்னட் – டியான் மியர்ஸ் ஜோடி ஆடி வருகிறார்கள்.  

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் 

ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி (விக்கெட் கீப்பர்), பென் கர்ரன், டியான் மியர்ஸ், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், வெஸ்லி மாதேவெரே, பிராட் எவன்ஸ், நியூமன் நியாம்ஹுரி, ரிச்சர்ட் ங்காரவா, பிளஸ்ஸிங் முசரபானி. 

இந்தியா: வைபவ் சூரியவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரின்கு சிங், சிவம் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், அசோக் சர்மா, மயங்க் யாதவ்.

Source link