வெள்ளி கடத்தல் பொருத்தவரையில் ஏப்ரல் 1 – மே 12 காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 பேர் மட்டுமே. அதன் பின்னர் 2 பேர் மட்டுமே வெள்ளி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலை தடுக்கவும் கண்டறியவும், சுங்கத்துறையும், வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் (DRI) தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது அமலாக்க துறையின் மூலமாக இந்த நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தீர்க்கப்படுவதாகவும் அமைச்சர் பிரசாதா தெரிவித்தார்.
தங்கம் வெள்ளி கடத்தல் தொடர்பாக இந்திய ஜுவல்லர்ஸ் அசோசியேசன் தலைவர் பிரித்திவிராஜ் கோத்தாரி ” தங்கம் வெள்ளி உள்ளிட்ட ஆபரண பொருட்களின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட ஏழு வாரங்களுக்கு, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 60% ஆக அதிகரித்துள்ளது.. வெள்ளியின் பறிமுதல் தினசரி ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அந்நிய செலாவணி இருப்பைப் தக்க வைக்கவும் , அதிகளவு இறக்குமதியை கட்டுப்படுத்தவும் சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார சூழ்நிலைகளில் இருந்து இந்தியாவை பாதுகாக்கவும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான வரியை உயர்த்தியது. ஆனால், அதிகப்படியான வரி கடத்தல் சம்பவங்களுக்கு வழி வகுத்ததையும் மறுக்க முடியாது.
