கிரிக்கெட் வீரர் வார்னருக்கு சிறையா?-வெளியான பரபரப்பு தகவல்கள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் அவருக்கு 9 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் டேவிட் வார்னர் தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது காவல்துறையினர் நடத்திய திடீர் மூச்சுப் பரிசோதனையில் அவர் சிக்கினார். அவரது ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.104 ஆக பதிவாகியிருந்தது. இது ஆஸ்திரேலிய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எல்லையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.

இது தொடர்பாக சிட்னி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது வார்னர் நேரில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் பாபி ஹில், வார்னர் தனது தவறை உணர்ந்து குற்றத்தை ஒப்புக்கொள்வதாக முறைப்படி நீதிமன்றத்தில் தெரிவித்தார். நண்பரின் வீட்டில் மது அருந்திவிட்டு உபெர் வாகனத்தை எடுக்காமல் காரை ஓட்டிச் சென்றது ஒரு முட்டாள்தனமான முடிவு என வார்னர் வருந்தியுள்ளார். இதனால் அவருக்கு 9 மாதங்கள் வரை சிறை, குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து,  2,200 ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 1.2 லட்சம் ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Source link