இதனிடையே கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், டெல்லி ஜந்தர் மந்தரிலும் கரப்பான்பூச்சி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளன.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்படி, ராகுல் வீட்டில் இருந்து காந்தி நினைவிடம் நோக்கி பேருந்து மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் சென்றனர். அங்கு சென்ற அவர்கள், மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பேரணியாக சென்று நீட் வினாத்தாள் கசிவால் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் காந்தி நினைவிடம் நோக்கி சென்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தடையை மீறிச் சென்று போராட்டம் நடத்தி தேசிய கீதம் பாடினர்.
