வாஷிங்டன்: அமெரிக்காவின் அரிசோனா மாகாண எம்.பி., பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல டாக்டர் அமிஷ் ஷா, 48, அபார வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அரிசோனா மாகாண எம்.பி., பதவிக்கு, ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது.
கட்சியின் அனுபவமுள்ள பெரும் தலைவர்கள் வேறு ஒரு வேட்பாளரை ஆதரித்தனர். கடும் போட்டிக்கு இடையே, நம் நாட்டின் குஜராத் மாநிலத்தை பூர்வீமாகக் கொண்ட அமிஷ் ஷா, கட்சியின் வேட்பாளராக தேர்வாகியுள்ளார்.
வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில், குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவைப் பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் ஜெய் பீலியை எதிர்த்து அமிஷ் ஷா போட்டியிடுகிறார்.
