சென்னை: ஐரோப்பிய நாடான பிரிட்டனின், லண்டன் நகரைச் சேர்ந்த, ‘குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்’ எனும் க்யூ.எஸ்., தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். அதேபோல், மாணவர்கள் படிப்பதற்கு தகுந்த நகரங்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது.
இதன்படி, 2027ம் ஆண்டு, மாணவர்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள் பட்டியலை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த பல்கலைகள், வேலை வாய்ப்புகள், மாணவர்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை செலவு, சர்வதேச மாணவர்களின் பங்கு, மாணவர்களின் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதில், உலகளவில் தென்கொரியாவை சேர்ந்த சியோல் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ, பிரிட்டன் தலைநகர் லண்டன் ஆகிய இரு நகரங்கள், இரண்டாம் இடம் பிடித்துள்ளன.
நம் நாட்டில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை, 91வது இடம், டில்லி 99வது இடம், கர்நாடக மாநிலம் பெங்களூரு 114வது இடம், தமிழக தலைநகர் சென்னை 123வது இடத்தில் உள்ளன.
