ஆதிதிராவிடருக்கு 2 நாள், பழங்குடியினருக்கு ஒரு வாரம்; சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து சமூக நலத்துறை முக்கிய உத்தரவு

ஆதிதிராவிடர்களுக்கு 2 நாளில் சாதி சான்றிதழ். பழங்குடியினருக்கு ஒரு வாரத்தில் சாதி சான்றிதழ். எஸ்.சி./எஸ்.டி மக்களுக்கு காலம் தாழ்த்தாமல் சாதிச்சான்று வழங்க வேண்டும். காலதாமதம் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நீதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இனச்சான்று வழங்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிழ் வழங்குவதில் கால தாமதம் இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சமூகநீதித்துறை சார்பில், புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதன்படி, ஆதிதிராவிடர்களுக்கு 2 நாளில் சாதி சான்றிதழ். பழங்குடியினருக்கு ஒரு வாரத்தில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எந்த வகையிலும் காலம் தாழ்த்த கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை அமைச்சர் பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு செல்லும்போது, பலரும் சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் இருக்கும் தாமதம் குறித்து புகார்கள் அளித்துள்ளனர், இதன் காரணமாக இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சான்றிதழ் வழங்குவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 15 நாட்களுக்குள் அது தொடர்பான மனுகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் அவர்களுக்கு சான்றிதழ் அளிக்க சாத்தியக்கூறு இல்லை என்றாலும் அது குறித்து மனுதாரருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சமூகநலத்துறை சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் எஸ்.சி/எஸ்.டி மக்கள் சான்றிதழுகாக காத்திருக்க வேண்டிய சூழலில் இருந்து விடுபட்டுள்ளனர்.

Source link