உங்கள் அழகிற்கான காரணம் என்ன? ராஷ்மிகாவின் எதிர் பாராத பதில்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. தனது தனித்துவமான நடிப்பு மற்றும் அனைவரையும் கவரும் பேச்சுக்களால் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுபவர். பல்வேறு மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே, சமீபத்தில் தனது காதலரும், நடிகருமான விஜய் தேவர் கொண்டாவை திருமணம் செய்து கொண்டார். தனது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.  

இந்நிலையில், சமீபத்தில் அவரிடம் ரசிகர்கள் தங்களின் அழகிற்கு என்ன காரணம் என்று கேட்டிருந்தனர். அதற்குப் பதில் அளித்த ராஷ்மிகாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ”உங்கள் அழகிற்கு என்ன காரணமா எனக் கேட்கிறீர்கள்? முகம் அழகாக இருக்க வேண்டுமென்றால், எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தாலே முகம் அழகாக மாறும். எப்போதும் மகிழ்ச்சியாகவும், மன அமைதியுடனும் இருத்தலே, நமது உடலை அழகாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.  

நாம் அழகாக தெரிவதற்கு, அழகு சாதனப் பொருட்களை விடவும் மகிழ்ச்சியும், அமைதியான மன நிலையும் மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இந்த பதிலை யாரும் எதிர் பார்க்கவில்லை. இருப்பினும், இதற்கு ரசிகர்கள் ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  

Source link