சென்னை: தமிழகத்தில் வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அறிக்கை:
1. வேலூர்,
2. ஈரோடு,
3. கரூர்,
4. திண்டுக்கல்,
5. மதுரை,
6. விருதுநகர்,
7. தூத்துக்குடி
8. திருநெல்வேலி
ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஜூலை 24) முதல் ஜூலை 28ம் தேதி வரை ஆகிய 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
