அமெரிக்கா-ஈரான் போர் சமரசம்; சுமார் ரூ.1 லட்சம் கோடி நிதி கேட்கும் பாகிஸ்தான்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது.  இந்த போரின் காரணமாக, அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல், லெபனான், சவூதி அரேபியா, குவைத், பக்ரைன் மற்றும் அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. குறிப்பாக,  பொருளாதார ரீதியான இழப்பு மட்டுமல்லாமல் ஏராளமான உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த போர் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.  

இந்த போரில் ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பொது மக்களும் உயிர் இழந்துள்ளனர். இது உலக அளவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர், சம்பந்தப்பட்ட நாடுகளை மட்டுமல்லாமல் போரில் சம்பந்தமில்லாத நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. 

அதாவது, இந்த போரின் எதிரொலியாக மேற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய கடல் வழியான ஹார்மோசை ஈரான் மூடியது. இதனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, பல்வேறு உலக நாடுகளும் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால், பல நாடுகள் அவசர நிலையைப் பிரகடன படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து, உலக நாடுகள் பலவும் இந்த போரை நிறுத்த வேண்டும், இருதரப்பும் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தின. இதையடுத்து, பாகிஸ்தான் இருதரப்பையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித  முடிவும் எட்டப்படாததையடுத்து, மூன்றாவது முறையாக அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது பாகிஸ்தான்.  இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இருதரப்பும் அமைதி ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டன.  

இந்நிலையில் இருதரப்பிற்கும் அமைதி ஒப்பந்தம் செய்து வைத்த பாகிஸ்தான் “5 ஆண்​டு​கள் வரை முதிர்வு காலம் கொண்ட 10 பில்​லியன் டாலரை (ரூ.96 ஆயிரம் கோடி) இருதரப்பு பரிவர்த்​தனை நிலைப்​படுத்​தல் ஆதரவு வசதியை வழங்க வேண்​டும்”  என அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது. 

அதாவது, அமெரிக்​க-ஈ​ரான் போரின்​போது இருதரப்​புக்​கும் இடையே, சமரச முயற்​சியை பாகிஸ்​தான் மேற்​கொண்​டது. இது, அந்​நாட்​டின் ராஜதந்​திர அந்தஸ்தை உயர்த்​தி​யது. இதனால்​தான் அமெரிக்காவிடம் நிதி​யுதவி கோரியுள்ளது எனக் கூறப்​படுகிறது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிடம் கிட்டதட்ட ஒரு லட்சம் கோடி நிதியுதவி கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

Source link