காரைக்காலில் இருந்து விழிதியூர், கணபதிபுரம், பொறக்குடி, அம்பல் வழியாக பூந்தோட்டம் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 20 – க்கும் மேற்பட்ட பயணிகள் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் காயம் அடைந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் பூந்தோட்டம், சன்னாநல்லூர், திருவாரூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம்.
