'எம்க்யூர் பார்மா' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'மோதிலால் ஓஸ்வால்'

வலுவான பிராண்டு மதிப்பு, பன்னாட்டு கூட்டாண்மை மற்றும் சர்வதேச சந்தை விரிவாக்கம் ஆகியவற்றால், மருந்து தயாரிப்பு துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘எம்க்யூர் பார்மா’ நிறுவனம் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் அளிக்கும் என, ‘மோதிலால் ஓஸ்வால்’ தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தை ‘வாங்கலாம்’ என்றும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் வருவாய் 2026 – 2028 நிதி ஆண்டுகளில், சராசரியாக 13.90 சதவீதமும், செயல்பாட்டு லாபம் 20.30 சதவீதமும், நிகர லாபம் 27.90 சதவீதமும் வளர்ச்சி அடையும் என்றும் கணித்துள்ளது. இந்நிறுவனத்தின் லாப வரம்பு 2025 – 2026ல் 19.40 சதவீதத்தில் இருந்து 2027 – 2028ல் 21.70 சதவீதமாக உயரும் எனவும், ‘மோதிலால் ஓஸ்வால்’ கணித்துள்ளது.

பரிசீலிப்பதற்கான காரணங்கள்
* மகப்பேறு மருத்துவம் பிரிவில் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம்
* ‘ஜுவென்டஸ்’ முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட பின், அதன் முன்னணி பிராண்டுகளான, ‘பெவொன், எஸ்லோ, மேக்ஸ்ட்ரா, ஜோஸ்டம்’ வாயிலாக விற்பனை சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது
* ‘சனோபி, நோவோ நோர்டிஸ்க், ரோச்’ போன்ற சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் இணைந்து, குறிப்பிட்ட மருத்துவ பிரிவுகளில் விற்பனையை விரிவுபடுத்தி வருகிறது
* நிறுவனத்தின் மொத்த வருவாயில் சர்வதேச சந்தையின் பங்களிப்பு கிட்டதட்ட 56 சதவீதமாக உள்ளது
* கனடா, ஐரோப்பாவிலும் வலுவான சந்தை பங்கை பெற்றுள்ளது.

தற்போதைய சந்தை விலை

(24.07.2026) ரூ.1,881

இலக்கு வி லை

ரூ.2,260

எதிர்பார்க்கப்படும் லாபம்

27%

Source link