GOLD PRICE TODAY : வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தங்கம் விலை கடந்த 17-ந்தேதி வரை குறைந்து கொண்டே வந்தது. பின்னர் 18-ந்தேதிக்கு பிறகு உயரத் தொடங்கியது. தினமும் ஏறுமுகத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நேற்று திடீரென்று தங்கம் விலையில் அதிரடி சரிவு காணப்பட்டதை பார்க்க முடிந்தது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 500-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் வார இறுதிநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,300-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

24-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

23-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000

22-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,440

21-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760

20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

24-07-2026- ஒரு கிராம் ரூ.240

23-07-2026- ஒரு கிராம் ரூ.245

22-07-2026- ஒரு கிராம் ரூ.245

21-07-2026- ஒரு கிராம் ரூ.240

20-07-2026- ஒரு கிராம் ரூ.235

Source link