தினமும் 2 வேளை கையெழுத்து போடணும்..! – செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் செக்..!

அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு ஆஜராகி கையத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை, அது விதித்த நிபந்தனையின்படி இருவரும் ஆஜராகவில்லை. இத்தகைய சூழலில் தான் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் “விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக் கூடாது. விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனில் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று மீண்டும் உயர் நதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளம்திரையன் அமர்வில் 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கில் முன் ஜாமீன் பெற்றிருந்தாலும், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை இதுவரை இவர்கள் இருவரும் பின்பற்றவில்லை. இருவரும் சரணடையாத நிலையில் காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என்று முன்கூட்டியே உத்தரவு வழங்க முடியாது என்றும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நடவடிக்கைகளை முன்வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்தார். அத்துடன் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜி, முன்ஜாமீன் நிபந்தனையின்படி பிணைத்தொகை செலுத்துவதற்காக நேற்று (24.7.26 அன்று) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி பிணைத்தொகையை செலுத்தினார்.

Source link