இந்த தொடர் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்ததால், அது ஒன்றிய அரசுக்கு நெருக்கடியாக மாறியது. இதையடுத்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை இன்று (25-07-26) ராஜினாமா செய்தார். இதையடுத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி – மத்திய அமைச்சர்கள் இடையே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் விடுத்த இரண்டு கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்பாதாக மத்திய அமைச்சர்களான ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்தனர்.
மத்திய அரசு கோரிக்கையைத் தொடர்ந்து, தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து, அடுத்த கல்வி அமைச்சர் யாரை நியமிப்பது? என்பது குறித்தான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் பரிந்துரை அடிப்படையில் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
