எனவே எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுடைய பொருளாதார அடித்தளத்தை சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தபால் துறையின் சேமிப்புத் திட்டங்கள் சிறந்த தேர்வாகும்.
இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நிறையப் பேர் சேமிப்புத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் சாமானிய மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசு பல சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) திட்டம் என்பது மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பான நீண்டகால சேமிப்பு மற்றும் வரிச் சேமிப்புத் திட்டமாகும்.
பிரபலமான PPF சேமிப்புத் திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதில், வருடத்திற்கு ஒரு முறையாவது பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். மேலும், உங்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக அல்லது 12 தவணைகள் வரை தொடர்ந்து முதலீடு செய்யலாம்.
15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் PPF திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் மற்றும் அதிகபட்சம் ரூ. 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
