Chennai News Live Updates: சில அரசியல் கட்சிகள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து புகழைத் திருடுகிறது

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போராட்டம் தொடரும்; மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – ராகுல் காந்தி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு முழுவதும் வெடித்த தீவிர போராட்டங்களை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், நாட்டின் கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மாணவர்களின் இந்தப் போராட்டத்தைப் பாராட்டியதோடு, இது மாணவர் சமுதாயத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் குறிப்பிட்டார். நாட்டின் கல்வி முறைத் தாக்கப்பட்டும், தனியார்மயமாக்கப்பட்டும் வந்த நிலையில், அதற்கு எதிரான எதிர்வினையாகவே இந்தப் போராட்டம் அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் மற்ற இரு கோரிக்கைகள் குறித்துப் பேசிய அவர், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் – அதாவது தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் அதற்கு உத்தரவிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

Source link