தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நீலகேனி தலைமையில் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடில்லி: தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நீலகேனி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அந்த வீடியோவில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: மாணவர்களின் எதிர்காலத்துக்காக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கெடுத்தவர்கள், சிறையில் வாடுகின்றனர். ஏற்கனவே விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. கடுமையான விதிகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தை பார்லிமென்டில் நிறைவேற்ற உள்ளோம்.

இருப்பினும், நமது எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். நமது தேர்வு முறையை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். மேலும் அது தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த குழு தேர்வு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும். அதன் அறிக்கை அடிப்படையில் வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை விரைவில் உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த வீடியோவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source link