ஜூலை 30-ல் மெகா ட்விஸ்ட்: இபிஎஸ்-ஐ நேரில் அழைத்த சபாநாயகர்.!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவில் பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மூத்த நிர்வாகிகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்தது. அதிமுகவின் தேர்தல் தோல்வியே இதற்கு மிக முக்கிய காரணம்.

கடந்த 2 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றியைப் பெற முடியாத காணத்தால், அதிமுக தலைமை மீது எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுக நிர்வாகிகள் மட்டுமின்றி எம்எல்ஏக்களும் அக்கட்சியை விட்டு விலகினர். இதில் ஆறு எம்எல்ஏக்கள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. ஏற்கனவே மூன்று கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், தற்போது நான்காம் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர். ஆனால் இம்முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் இபிஎஸ்ஸையும் அழைத்துள்ளார் சபாநாயகர்.

இதன்படி வருகின்ற ஜூலை 30ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நான்காம் கட்ட விசாரணை தொடங்கவுள்ளது.

Source link