4-hour Lpg Delivery,4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் சிலிண்டர்: புதிய சேவையைத் தொடங்கிய இன்டேன் – indane gas company now will deliver cylinders to your home in just 4 hours

வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி தொடர்பாக இன்டேன் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேஸ் சிலிண்டர்கள் இனி வெறும் நான்கு மணி நேரத்திற்குள் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும். இந்நிறுவனம் எக்ஸ்பிரஸ் டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. மேலும், இன்டேன் நிறுவனம் 10 கிலோ எடையைக் கொண்ட ‘எக்ஸ்ட்ராலைட்’ (XTRALITE) சிலிண்டர் சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் 10 கிலோ சிலிண்டராக இருந்தாலும் சரி அல்லது 5 கிலோ சிலிண்டராக இருந்தாலும் சரி, இரண்டும் வெறும் நான்கு மணி நேரத்திற்குள்ளேயே உங்களுக்குக் கிடைக்கும்.

எந்தெந்த நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது?

தற்போது புனே, குருகிராம், இந்தூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட சில நகரங்களில் இன்டேன் நிறுவனம் தனது எக்ஸ்பிரஸ் டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குள் நாட்டின் பிற 25 நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதத்துக்குள் நம் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் நான்கு மணி நேரத்திற்குள் எல்பிஜி சிலிண்டர்களை விநியோகிக்க இன்டேன் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இந்த சேவை அதிகமான மக்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு செய்வது எப்படி?

கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய, முதலில் Indian Oil One செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி 5 அல்லது 10 கிலோ சிலிண்டர்களை எளிதாக முன்பதிவு செய்யலாம். மேலும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cx.indianoil.in மூலமாகவும் எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்டேன் நிறுவனம் விரைவில் 7588888824 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் எக்ஸ்பிரஸ் டெலிவரி சேவையைத் தொடங்கவுள்ளது.

10 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் எடைக் குறைவானவை. மேலும் எளிதில் கையாளக் கூடியவை என்பதைக் கவனிக்க வேண்டும். இவை துருப்பிடிக்காதவை மற்றும் பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானவை. இதனால் மக்களிடைய இந்த வகையான சிலிண்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ ( Indane XTRALITE NOW ) சேவையைப் போலவே, இன்டேன் நிறுவனம் தனது 5 கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டருக்கும் 4 மணி நேர டெலிவரி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. சிறிய குடும்பங்கள், மாணவர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் வணிகப் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள இந்த சிறிய சிலிண்டர், எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய எல்.பி.ஜி தீர்வை நாடும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விரைவான டெலிவரி சேவையானது, வாடிக்கையாளர்களின் அணுகலை மேம்படுத்தி காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வரவேற்பு மற்றும் செயல்பாட்டுத் தயாரின்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சேவையை மேலும் பல இடங்களுக்கு இன்டேன் நிறுவனம் படிப்படியாக விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ அறிமுகத்துடன், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எரிசக்தி தீர்வுகளில் இன்டேன் நிறுவனம் தனது கவனத்தை மேலும் பலப்படுத்தி வருகிறது. எடை குறைவான சிலிண்டர்கள், விரைவான டெலிவரி, விருப்பமான டெலிவரி நேரங்கள் மற்றும் டிஜிட்டல் புக்கிங் ஆகியவற்றின் மூலம் எல்.பி.ஜி விநியோகத்தை நவீனமயமாக்குவதற்கும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இன்டேன் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

Source link