ரீல்ஸ் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்; இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தின் முப்பால் பகுதியில் உள்ள  ஸ்ரீ ராம் சாகர் அணை கால்வாயில் குளிப்பதற்காக ஷேக் அலிம் (24), நஜ்வாத் (24) மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பர்ஹான் (17)  மற்றும் அகிம் (17) ஆகியோர் சென்றனர்.   

அவர்கள் அந்த அணைக்கட்டின், லட்சுமி பாசன கால்வாயில் குளித்தவாறே செல்போனில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாகக் கால் வழுக்கி ஒருவர் மேல் ஒருவராக விழுந்தனர். இந்த சம்பவத்தில் அந்த கால்வாயில் விழுந்த 4 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பின்பு, இது குறித்து தகவல் அறிந்த வந்த மீட்புப் படையினர், கால்வாயில் விழுந்த நால்வரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த தீவிர தேடுதல் வேட்டையில், மூன்று பேரின் உடல்களை மீட்டனர். இருப்பினும், சிறுவன் அகிமின் உடலை மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்களுக்கு ஏற்பட்ட இந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Source link