தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டத்தினால் செய்வதறியாத ஒன்றிய அரசு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து அவர்களின் மூன்று கோரிக்கைகளையும் ஏற்றது. அதாவது, தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது, நீட்டால் உயிர் இழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் மற்றும் அவர்களை வருங்காலங்களில் இந்த போராட்டத்தின் காரணமாக அவர்கள் மீது அரசு பழி வாங்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்களை அரசு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த போராட்டத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரும்பப் பெற்றனர்.
ஆனால், தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அரசு குறிவைத்துப் பழி வாங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில், பாஜக ஆலும் மாநிலமான பீகாரில், அம்மாநில அரசு இளைஞர்களைப் பழி வாங்கும் நடவடிக்கையில் இடிபட்டுள்ளதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது காவல் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுடுகிறார். போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது ஏகே 47 ரக துப்பாக்கியைக் கொண்டு சுடுவது நாட்டிலேயே இதுதான் முதன்முறை.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு ஜனநாயகத்தில் மக்களுக்கு உரிமை உள்ளது. அரசின் இத்தகைய போக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மீதும் பாஜக அரசுகள் ஏகே 47 துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுமா?
இத்தகைய மோசமான செயலுக்கு, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மட்டுமே குற்றவாளியாகக் கருதப்படுவாரா? அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டாமா?
போராட்டத்தில் மாணவர்களுடன் உடன்பாடு எட்டப்பட்ட பிறகும், பீகாரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். அவர்களின் குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுகிறார்கள். மாணவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், என்டிஏ (பாஜக) அரசு அதற்கான கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் இந்த கொடூர செயளுக்கு நாடாளுமன்ற எதிர் கட்சி தலைவர் ராகுல்காந்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
