சமூக வலைதளங்களில் அவதூறு: காவல் ஆணையரிடம் மேயர் பிரியா புகார்

சென்னை: அடை​யாளம் தெரி​யாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரு​வ​தாக, சென்னை காவல் ஆணை​யரிடம், மேயர் பிரியா புகார் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, சென்னை காவல் ஆணை​யரிடம் ஆன்​லைன் மூலம் புகார் ஒன்றை அளித்​துள்​ளார். அதில், ‘வாட்​ஸ்​அப், பேஸ்​புக் உள்​ளிட்ட சமூகவலைத் தளங்​களில் தன்னை குறித்து அவதூறான தகவல்​கள் மற்​றும் தவறான பதிவு​கள் பரப்​பப்​படு​கிறது.

இதன் மூலம் தனது நற்​பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்த முயற்சி நடை​பெறுகிறது. மேலும், சென்னை மாநக​ராட்சி அலு​வல​கத்​தின் அதி​காரப்​பூர்வ தொலைபேசி எண்​ணுக்​கும், அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் மீண்​டும் மீண்​டும் தொடர்​பு​கொண்டு தொந்​தரவு அளித்து வரு​கின்றனர்.

இதனால் அலு​வலக பணி​களும் பாதிக்​கப்​படு​கிறது. எனவே, சம்​பந்​தப்​பட்ட நபர்​களை கண்​டறிந்து அவர்​கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று புகாரில் குறிப்​பிட்​டுள்​ளார். மேயர் பிரி​யா​வின் புகாரின் அடிப்​படை​யில், சென்னை காவல்​துறை முதற்​கட்ட விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளது.

சமூக வலைத்​தளங்​களில் வெளி​யிடப்​பட்ட பதிவு​கள், பயன்​படுத்​தப்​பட்ட செல்​போன் எண்​கள், சமூக வலைத்தள கணக்​கு​கள் மற்​றும் அவற்​றின் ஐ.பி. முகவரி உள்​ளிட்ட தொழில்​நுட்ப ஆதா​ரங்​களை சேகரிக்​கும் பணி​யில் போலீ​ஸார் ஈடு​பட்​டுள்​ளனர்.

தேவை​யா​னால், இந்த வழக்கு சைபர் க்ரைம் பிரிவு விசா​ரணைக்​கும் மாற்​றப்​பட்​டு, சமூக வலைத்தள நிறு​வனங்​களிட​மிருந்​தும் தகவல்​கள் பெறப்​படலாம் என்​றும் கூறப்​படு​கிறது.

சென்னை மாநக​ராட்சி மேயரே அடை​யாளம் தெரி​யாத நபர்​களின் ஆன்​லைன் தொல்லை குறித்து காவல் ஆணை​யரிடம் புகார் அளித்​திருப்​பது பரபரப்​பை ஏற்​படுத்​தி உள்​ளது.

Source link