சென்ட்ரல் மெட்ரோ அருகே 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலை​யம் அரு​கே, பச்​சையப்​பன் கல்​லூரி மாணவர்​கள் 2 பேரை, 15 பேர் கொண்ட மர்ம கும்​பல் அரி​வாளால் வெட்​டிய சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

சென்​னை, திரு​முல்​லை​வா​யில் பகு​தி​யைச் சேர்ந்​தவர் நிதிஷ்கு​மார் (18). பச்​சையப்​பன் கல்​லூரி​யில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வரு​கிறார். அதே​போல், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த 17 வயது சிறு​வன், அதே கல்​லூரி​யில் பி.​காம். முதலாம் ஆண்டு மாணவ​ராக உள்​ளார். இரு​வரும் நேற்று காலை கல்​லூரி செல்​வதற்​காக, ரயி​லில் சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் வந்​தனர்.

அங்​கிருந்து சென்ட்​ரல் மெட்ரோ ரயில் நிலை​யம் வழி​யாக நடந்து சென்​ற​போது, திடீரென கத்​தி, அரி​வாள் உள்​ளிட்ட பயங்கர ஆயுதங்​களு​டன் வந்த சுமார் 15 பேர் கொண்ட கும்​பல், இரு​வரை​யும் வழிமறித்து சரமாரி​யாக வெட்​டியது.

இந்த தாக்​குதலில், நிதிஷ்கு​மார் மற்​றும் 17 வயது மாணவர் இரு​வருக்​கும் தலை உள்​ளிட்ட உடலின் பல பகு​தி​களில் பலத்த காயம் ஏற்​பட்​டது. தாக்​குதல் நடத்​திய கும்​பல் அங்​கிருந்து தப்பி ஓடியது.

பட்​டப்​பகலில் நடை​பெற்ற இந்த அதிர்ச்சி சம்​பவம் தொடர்​பாக, பொது​மக்​கள் உடனடி​யாக போலீ​ஸாருக்​கு தகவல் தெரி​வித்​தனர். பெரியமேடு போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து சென்​று, காயமடைந்த மாணவர்​கள் இரு​வரை​யும் மீட்டு சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அங்கு அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த சம்​பவம் தொடர்​பாக, பெரியமேடு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து, தாக்​குதல் நடந்த பகுதியில் உள்ள கண்​காணிப்பு கேம​ராக்​களின் பதிவு​களை கைப்​பற்றி ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​கள் எந்த கல்​லூரியைச் சேர்ந்​தவர்​கள், ரூட் தல விவ​காரத்​தில் தாக்​குதல் நடை​பெற்​ற​தா? அல்​லது முன்​விரோதம் காரணமா என பல்​வேறு கோணங்​களில் போலீ​ஸார்​ தொடர்ந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

Source link