தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவராக அறியப்படுபவர் தனுஷ். நடிப்பு, இயக்கம், பாடல் என பல்திறன் கலைஞரான இவர், தனது திறமையின் மூலமாக இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவில் தடம் பதித்தவர்.
தமிழ் திரையுலகில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் உலக அளவிலான ஹாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று அவர் தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வழக்கத்தை விட இந்த பிறந்த நாள், அவருக்கு மறக்க முடியாத மிகச் சிறப்பான நாளாகா இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, இந்த பிறந்தநாளில் அவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இவர் அரசியில் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகின்றன. அதன் முன்னோட்டமாகவே இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல் இன்றுவரை உறுதிப் படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், இந்த ஆண்டு தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இது தனுஷ் ரசிகர்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
