ஜனநாயகன் படத்திற்கு எதிராக வழக்கு; தணிக்கை வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

நமது நிருபர்

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழை மறுபரிசீலனை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் தணிக்கை வாரியம், தயாரிப்பாளர், இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

முதல்வர் விஜய்யின் கடைசி படமாக ஜூலை 23ம் தேதி ஜனநாயகன் படம் வெளிவந்தது. இந்த படத்திற்கு எதிராக ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மனுவில், ”விஜய் நடித்த ஜனநாயகன் படத்தில் பாப்பாபட்டி கிராமம் பற்றிய தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.

ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று (ஜூலை 28) ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். தயாரிப்பாளர், இயக்குனர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Source link