நமது நிருபர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி சொத்து முறைகேடு தொடர்பாக 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் ஆக்கிரமிப்பு மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணையில் உள்ளன
கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத 177 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து, கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கும் மற்றும் மீட்கும் பணிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான 1.79 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றி, பத்திரப்பதிவு மற்றும் அடமானம் வைத்ததாக, கோவில் நிர்வாகம் அளித்த புகாரில் முன்னாள் விஏஓ அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன் உள்ளிட்ட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
