இந்நிலையில், இவர் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஓசூரில் இவர் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு, ஒரு கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அவர், சிறிது நேரத்தில் பையில் வைத்திருந்த எஞ்சின் ஆயிலை எடுத்துக் குடித்தார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்பு, இது குறித்துப் பேசிய அவர், ”என் பெயர் குமார். நான் தினமும் எஞ்சின் ஆயிலை தான் குடிப்பேன். அதனால், என்னை எல்லோரும் ஆயில் குமார் என்றே அழைப்பார்கள். தினமும் மெக்கானிக் கடைகளில் சென்று பழைய ஆயிலை வாங்கிக் கொள்வேன். எப்போதாவது ஒரு முறை தேநீர் குடிப்பேன். மற்ற உணவுகளை என் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது, எனவே, பிற உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டேன். ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 8 லிட்டர் வரை எஞ்சின் ஆயிலை குடிப்பேன். கடந்த 22 வருடங்களாக இந்த ஆயிலைத் தான் குடித்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
இது கேட்போரை அதிரச் செய்துள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
