45 வயதில் தாய்மை; 1 வருடம் கழித்து ரகசியம் உடைத்த நடிகை!

தமிழில் தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் பத்மபிரியா(46). மற்ற மொழிகளிலும் கணிசமான படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை குறைத்துள்ளார். 

2014ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நீண்ட காலம் குழந்தை இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என்னுடைய வாழ்க்கையின் 365வது நாள்’ என்ற கேப்ஷனுடன் குழந்தை கை மட்டும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு கடந்த வருடம் குழந்தை பிறந்து அதை பொதுவெளியில் அறிவிக்காமல் ஒரு வருடம் ரகசியமாக வைத்து தற்போது அதனை உடைத்துள்ளார்.     இப்போது அவருக்கு 46வது வயது நடந்திருக்கும் நிலையில் 45வது வயதில் தனது தாய்மையை அடைந்துள்ளார். 

அப்போதும் அக்குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அவர் தெரிவிக்கவில்லை. விரைவில் அதனை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அபிராமி, “உன்னையும் அந்தச் சின்னஞ்சிறு குழந்தையையும் நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியும்” எனக் கமெண்ட் செய்துள்ளார். அதை ஒப்புக்கொள்வதாக பதிலளித்துள்ள பத்மபிரியா, உன்னால் தான் இது நடந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். 



Source link