பாரிஸ்: பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜினெடன் ஜிடேன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அண்மையில் முடிந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் அணியானது அரையிறுதியில் தோற்று வெளியேறியது.
இந் நிலையில் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெசாம்ப்ஸ் தமது 14 ஆண்டு பதவிக் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். அவருக்கு பதிலாக அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜினெடன் ஜிடேன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ரியல் மேட்ரிட் முன்னாள் பயிற்சியாளரான இவர், 2030ம் ஆண்டு உலகக்கோப்பை தகுதிச் சுற்றுகள் வரை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 1998ம் ஆண்டு பிரான்ஸ் அணி உலக கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஜினெடன் ஜிடேன்.
2006ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பிரான்ஸ் அணி இறுதி போட்டி வரை செல்ல ஜினெடன் ஜிடேன் முக்கிய பங்காற்றினார். தலைமை பயிற்சியாளர் நியமனம் குறித்து ஜிடேன் கூறி உள்ளதாவது;
பிரான்ஸ் அணியை விட பெரியது எதுவும் இல்லை. எனவே பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. இது ஒரு பெருமைக்குரிய விஷயம். என் மீது நம்பிக்கை வைத்து நியமித்த பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்புக்கு நன்றி. அணியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.
இவ்வாறு ஜினெடன் ஜிடேன் கூறினார்.
