படப்பிடிப்பில் விபத்து; ஜூனியர் என்.டி.ஆருக்கு காயம்!

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்  தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனில் கபூர், ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் நடந்து வரும் நிலையில் தற்போது நடந்து வரும் படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூனியர் என்.டி.ஆரின் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

முழுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, டாக்டர் ஜே. மதுசூதன் ராவ் மற்றும் டாக்டர் ஆர். ஏ. பூர்ணசந்திர தேஜஸ்வி தலைமையிலான மருத்துவர் குழு, அவர் முழுமையாகவும் சீராகவும் குணமடைவதை உறுதிசெய்ய, 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளது. அனைவரும் பயப்படத் தேவையில்லை என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். அவரது உடல்நிலை குறித்த அப்டேட்டுகளை உரிய நேரத்தில் வெளியிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் டிராகன் படப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திரை வட்டரங்கள் தெரிவிக்கின்றன.   

Source link