தமிழ் சினிமாவின் பன்முக திறமை கொண்ட பிரபலங்களில் முக்கியமானவராக இருக்கும் கங்கை அமரன், ஒரு பாடல் எழுத 10-15 நிமடங்கள் தான் ஆகும். ஆனால், இந்த பாடலை எழுத எனக்கு அரை நாள் ஆனது என்று ஒரு பாடலை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், டப்பிங் கலைஞர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் கங்கை அமரன். இயக்குனர் பாக்யராஜின் ஆரம்பக்கால படங்களுக்கு இசையமைத்த இவர், தன் அண்ணன் இளையராஜாவின் இசையில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார். சமீபகாலமாக இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், நேர்காணல்களில் திரைத்துறை ஜாம்பவான்களுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கங்கை அமரன், இன்றைய காலக்கட்டத்தில் கவிஞர்கள் பலரும் ஏ,ஐ. வைத்து சில வரிகளை உருவாக்கி பாடலில் சேர்த்துக்கொள்கிறார்கள்என்று தொகுப்பாளர் கேட்க, அப்படி பயன்படுத்தினால் கவிஞர் பெயருடன் உதவி ஏ.ஐ. என்று போடுங்கள். அப்போது தான் அது சரியாக இருக்கும். கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்எ எழுதும்போது உதவி பஞ்சு அருணாச்சலம் என்று போடுவார். அதேபோல் நீங்கள் உதவி ஏ.ஐ. என்று போடுங்கள். மூளையை கசக்கி எழுதினால் தான் நீங்கள் உண்மையாக கவிஞர்.
நான் பல பாடல்கள் எழுதி இருக்கிறேன். ஆனால் ஒரு பாடலை எழுதுவதறங்கு எனக்கு அரை நாட்கள் ஆனது. முந்தானை முடிச்சு திரைப்படத்தில் வரும் அந்தி வரும் நேரம் பாடல் எழுதும்போது எனக்கு அவ்வளவு நேரம் ஆனது, இத்தனைக்கும் அதில் 2 சரணம், 2 பல்லவி தான் அதற்கே இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. பொதுவாக நான் பாடல் எழுதும்போ 10-15 நிமிடங்களில் பாடல்கள் எழுதிவிடுவேன். அதுக்கு தான் பாக்யராஜூவிடம் பாடல் எழுதுவது கஷ்டம் என்று சொல்வார்கள் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.
1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கங்கை அமரன் இசையமைப்பதாக இருந்த இந்த படத்திற்கு கடைசி நேரத்தல் இளையராஜா மாற்றப்பட்டார். ஆனாலும் பாடல்கள் கங்கை அமரனுக்கு கொடுக்கப்பட்டது. அவர் எழுதிய பாடல்கள் இன்றைக்கும் ரசிக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
