செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் ராமேஷ்வரப்பட்டியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதோடு கரூரில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி செந்தில் பாலாஜியின், உதவியாளர் சுப்பிரமணி வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் வீடு மற்றும் கோதைநகர் பகுதியில் உள்ள கார்த்தி, ரமேஷ் ஆகியோரின் வீடுகள் உட்பட மொத்தம் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் மேலாளர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
