சமூக மாற்றத்திற்கான பயணத்தை துவங்குங்கள்; அண்ணாமலை அழைப்பு

சென்னை: சமூக மாற்றத்திற்கான பயணத்தைத் தொடங்குமாறு ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு அதன் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜவில் இருந்து விலகிய அண்ணாமலை, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற மக்கள் இயக்கத்தை துவக்கியுள்ளார். இந்த இயக்கத்தில் இதுவரையில் 19 லட்சத்து 37 ஆயிரம் இணைந்துள்ளனர். உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். போதை இல்லா தமிழகம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் இந்த இயக்கம், விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடந்த நிலையில், ஜூலை 26ம் தேதி அறிவிக்கப்பட்ட 2வது மாநாடு, ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் நடக்கும் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூக மாற்றத்திற்கான பயணத்தைத் தொடங்குமாறு ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணைந்தவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

‘வீ தி லீடர்ஸ்’ செயலியைப் பயன்படுத்துவது தொடர்பான வீடியோவுடன், அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; நமது ‘வீ தி லீடர்ஸ்’ செயலியை பதிவிறக்கம் செய்து, எப்படிப் பயன்படுத்துவது என்பதை, இந்தக் காணொளியில் எளிமையாக விளக்கியுள்ளோம். இதனைப் பார்த்து, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்! சமூக மாற்றத்திற்கான தலைமைப் பயணத்தைத் தொடங்குங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்கையும் அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Source link