முதல்வர் விஜய்யை காண உ.பி.யில் இருந்து நடைபயணமாக சென்னை வந்த இளைஞர்

சென்னை: ​உத்​தரபிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த அமன்​(24) என்ற இளைஞர், தமிழக முதல்​வர் விஜய்​யின் செயல்​பாடு​களால் ஈர்க்​கப்​பட்டு அவரின் தீவிர ரசிக​ராக மாறி​யுள்​ளார்.

விஜய்யை நேரில் சந்​திப்​ப​தற்​காக உத்​தரபிரதேசத்​தில் இருந்து நடைப்​பயணம் மேற்​கொண்டு தற்​போது தமிழகம் வந்​துள்​ளார்.

கடந்த ஜூலை 3-ம் தேதி அலிகரில் தனது பயணத்தை தொடங்​கிய அமன் சுமார் 25 நாட்​களுக்கு பின்​னர் நேற்று சென்னை வந்​தடைந்​தார். தலை​மைச் செயல​கம் வந்​தவரை முறை​யான முன்​அனு​மதி இல்​லாத​தால் காவல்​துறை​யினர் அனு​ம​திக்​க​வில்​லை.

இதுதொடர்​பாக, அவர் நிருபர்​களிடம் கூறுகை​யில், “தமிழகத்​தின் மக்​கள் நலன் சார்ந்த ஆட்​சிக்​காக முதல்​வர் விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க நடைபயண​மாக வந்​துள்​ளேன். மேலும், பலர் தனது பயணத்​தின் நோக்​கம் குறித்து கேட்​டறிந்​தனர்.

தேசப்​பற்றை வலி​யுறுத்​தும் வித​மாக தேசி​யக் கொடி​யுடன் பயணம் செய்​தேன். முதல்​வர் விஜய் தேசிய அரசி​யலில் பங்​காற்ற வேண்​டும். அவரை சந்​திக்க வாய்ப்பு கிடைக்​கும் என நம்​பு​கிறேன்​”என்​றார்.

Source link