சென்னை:”மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027ல் தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்; அனைவரும் இணைந்து வெற்றிகரமாக நடத்துவோம்” என இசையமைப்பாளர் இளையராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது பதிவு: இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027ல் தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) கடந்த ஜூலை 17ம் தேதி முதல் வரும் ஜூலை 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் காலப்பகுதியில் https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் கட்டத்தில் வருகை தரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
துல்லியமான மக்கள்தொகைத் தகவல்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027ஐ வெற்றிகரமாக நடத்துவோம். இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.
