நாமக்கல் கவிஞர் மாளிகை: 10வது மாடியில் முதல்வர் ஆபிஸ்- விஜய் வேலையை ஈஸியாக்கும் 5 விஷயங்கள் – pros and cons of cm vijay office moves to 10th floor of namakkal kavignar maligai

தமிழக முதலமைச்சர் விஜய் தனது அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது மாடிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்திருக்கிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இதன்மூலம் என்னென்ன விஷயங்கள் எளிதாக மாறும்? தலைமை செயலக அலுவலர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்? போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல் தளத்தில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் இருந்தபடி சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக முதலமைச்சர்கள் வேலை செய்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தனது அலுவலகத்தை அருகிலுள்ள 11 மாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது மாடிக்கு மாற்ற முடிவு செய்து, அதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

10வது மாடியில் ஆபிஸ் – வேலையை ஈஸியாக்கும் 5 விஷயங்கள்

கடற்கரையை பார்த்தவாறு காற்றோட்டம் நிறைந்த அலுவலகமாக கட்டமைக்கப்படுகிறது. விரைவில் டெண்டர் விடப்பட்டு அலுவலகம் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10வது மாடியை பொறுத்தவரை முதல்வர் அலுவலகம், முதல்வரின் செயலாளர் 1, செயலாளர் 2, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், உள்துறை தொடர்பான பிரிவுகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் அலுவலகங்கள் வரவுள்ளன. இதுதவிர உணவருந்தும் பகுதி, காத்திருப்போர் அறை, முதல்வர் ஓய்வெடுக்கும் அறை ஆகியவையும் இடம்பெறுகின்றன. மிகப்பெரிய கான்பரன்ஸ் ரூம் ஒன்று வரவுள்ளதால் முக்கிய அதிகாரிகள், விருந்தினர்கள் உடன் ஆலோசிக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தளத்தில் ஒரு பாதி முழுவதும் பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்படவுள்ளது. முதலமைச்சர் விஜய் விரைவான ஆலோசனை கூட்டங்களை நடத்துவதற்கு இந்த மாற்றங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக தலைமை செயலக அதிகாரிகள் சிலர் கூறுகையில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஏற்கனவே 30 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டடத்திற்கு முதலமைச்சர் அலுவலகமும் மாறுவதால் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது எளிதாக இருக்கும். கோப்புகளை ஆய்வு செய்து கையொப்பம் இடுவதும் விரைவாக நடைபெறும் என்றனர்.

இந்தி மொழியில் முதல்வர் விஜயின் Speech வைரல்! தேசிய அளவில் அதிகரிக்கும் ரசிகர்கள்!

தலைமை செயலக போலீசார் ஏற்பாடு

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் கவிஞர் மாளிகை முன்பு முதலமைச்சர் கார், ஆம்புலன்ஸ், போலீசார் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை நிறுத்தப்படும். இந்த கட்டடத்திற்கு அருகில் அரசு கேண்டீன் ஒன்று அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய மாளிகையின் முன்புறமாக முதலமைச்சர் தனது காரை நிறுத்தி விட்டு, தலைமை செயலக கேட் வழியாக நுழைந்து வலதுபுறம் திரும்பினால் சட்டமன்றத்திற்குள் செல்லலாம். நேராக சென்றால் நாமக்கல் கவிஞர் மாளிகைக்குள் செல்லலாம். இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து தடைகளும் அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.

தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு

இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கைக்கு தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் 10வது மாடியில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை அரசு அலுவலகங்கள் ஆக்கிரமித்துள்ளன. இவர்களை வேறு தளத்திற்கு இடமாற்றம் செய்வது தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும். புதிதாக இடநெருக்கடி உண்டாகும். ஏற்கனவே அரசு அலுவலகங்களில் போதிய இட வசதிகள் இன்றி தவிக்கும் நிலை காணப்படுகிறது. இதுதொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள விதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

தீவிபத்து ஏற்பட்டால் பெரிய நெருக்கடி

இத்தகைய சூழலில் 10வது மாடியில் இருந்து வேறு தளத்திற்கு மாற்றினால், ஏற்கனவே இருக்கும் துறைகள் உடன் நெருக்கடியான சூழலில் பணியாற்ற வேண்டி வரும். போதிய பாதுகாப்பு அம்சங்களும் குறையாக பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய அளவில் தீவிபத்து ஏற்பட்டால் வெளியேறுவதற்கு சரியான வசதிகள் இல்லை. தீயணைப்பு வீரர்கள் உள்ளே வருவதற்கும் நெருக்கடியான சூழல் காணப்படுகிறது என்று சங்கத் தலைவர் ஜி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Source link