மின்கம்பத்தில் ஏறிய கரடி; இறுதியில் நடந்த விபரீதம்

அமெரிக்காவில் மின் கம்பத்தில் ஏறிய கரடிக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  நியூ மெக்சிகோ மாகாணத்தில், யூனியன் கவுண்டி நகரின் கிலாட்ஸ்டோன்  காட்டுப்பகுதியில் அதிகப்படியான கரடிகள் உள்ளன. 

இந்நிலையில், கடந்த 20 தேதியன்று அந்த வனப்பகுதியின் அருகே உள்ள சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் ஒரு கரடி ஏறியது. 22 அடி உயரம் கொண்ட அந்த மின்கம்பத்தில் ஏறிய கரடி அதன் உச்சிக்கே சென்றுள்ளது. அப்போது, மின்கம்பத்தின் ஒயரில் கரடியின் உடல் பகுதிகள் பட்டதால், அந்த கரடியின் மீது மின்சாரம் பாய்ந்தது. 

அப்போது, உயிருக்குப் போராடிய கரடியைக் கண்டவர்கள், இது குறித்து மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், கரடியை உயிருடன் மீட்கப் போராடினர். ஆனால், 200 வோல்ட் அழுத்தம் கொண்ட மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த கரடி,  நீண்ட நேரம் உயிருக்குப் போராடிய நிலையில், இறுதியாக மின் கம்பத்தின் உச்சியிலேயே உயிர் இழந்தது. இதையடுத்து, உயிர் இழந்த கரடியின் உடலை காவல்துறையினர் மீட்டனர். பின்பு, இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Source link