தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!! ஸ்டாலினுக்கு டாட்டா காட்டும் ஓபிஎஸ்..!! தவெகவுடன் சீக்ரெட் டீலிங்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை மோதலால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ‘அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு’வை தொடங்கி, மீண்டும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்த போதிலும், எடப்பாடி பழனிசாமி அதற்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைக்க முன்வந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் திட்டவட்டமாக இருந்தார். இதனிடையே, ஓபிஎஸின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவிலும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் தஞ்சமடைந்தனர். எம்பி தர்மர் மீண்டும் எடப்பாடி அணிக்குத் தாவ, பண்ருட்டி ராமச்சந்திரனோ புதிய கட்சியையே தொடங்கினார்.

ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக வெவ்வேறு முகாம்களுக்குப் பிரிந்து சென்றதால், அரசியல் ரீதியாக அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டிய தீவிர நெருக்கடிக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டார். இத்தகைய சூழலில்தான், கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த ஒரு தலைவர் வேறொரு மாற்றுக் கட்சியில் இணைந்தது அதுவே முதல்முறையாகும். இருப்பினும், திமுகவில் இணைந்து மாதங்கள் கடந்த பின்னரும் அவருக்கு இதுவரை குறிப்பிடத்தக்க முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழக அரசியலின் தற்போதைய களச்சூழலைக் கணித்து, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதே எதிர்காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும் என ஓபிஎஸுக்கு அவருடைய மகன் ரவீந்திரநாத் ஆலோசனை கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன. மகனின் இந்த யோசனைக்கு ஓபிஎஸும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இதன் அடுத்தகட்டமாகத் தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடம் ரவீந்திரநாத் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது.

இதனால், விரைவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓபிஎஸ் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையக்கூடும் என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதே தொகுதியில் தவெக வேட்பாளராக மீண்டும் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

சுவைக்கு ஆசைப்பட்டால் உயிரே போயிரும்..!! உங்க கிச்சனில் இருந்து உடனே தூக்கிப் போடுங்க..!!

Source link