நீதிமன்றங்களில் மன்னிப்பு கோரியவர் ராகுல்: பாஜ பதிலடி

புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல், கடந்த காலங்களில் நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானிடம் மன்னிப்பு கேட்டார் என பாஜ தெரிவித்துள்ளது.

டில்லியில் நிருபர்களை சந்தித்த ராகுல், ” எந்த பாஜ தலைவரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்,” எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்து பாஜ செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக ராகுல் கூறியுள்ளார். பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ மற்றும் பாஜ தலைவர்கள் அப்படி ஏதும் நடக்கவில்லை என பத்திரிகையாளர் சந்திப்பு வாயிலாக தெளிவுபடுத்தி உள்ளனர். ராகுல் தன்னிடம்ஆதாரம் இருந்தால் கொடுக்க வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சர் பேசுவதை கேட்டதாக ராகுல் கூறினார். இது எப்படி சாத்தியம். இதற்கு முன்னர் மனோகர் பாரீக்கர் மற்றும் சுஷ்மா சுவராஜ் குறித்து ரபேல் விவகாரத்தில் பொய் கூறினார். தற்போது இந்த பொய்யை சொல்கிறார்.

ராகுல் மற்றும் லோக்சபாவில் அவரின் பேச்சு குறித்த பாஜவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாஜ தலைவரிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ராகுல் கூறியுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார். கடந்த காலங்களில், நீதிமன்றங்களில் ராகுல் மன்னிப்பு கேட்டவரலாறு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Source link