பெண் குழந்தைக்கு தாயான பிகில் பட நடிகை; மகள் போட்டோவுடன் பெயரும் அறிவித்து மகிழ்ச்சி

பிகில், எப்.ஐ,ஆர் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகை ரெபா மோனிகா ஜான் தனது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘பிகில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான ரீபா, பெண் குழந்தைக்கு தாயான மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதள பதிவு மூலம் அறிவித்துள்ளார்.

இதனுடன், தனது புதிதாகப் பிறந்த மகளின் முதல் புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். தனது கணவருடன் மற்றும் குழந்தையுடன் எடுத்த குடும்பப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகின. இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரெபா மோனிகா ஜான் தனது மகள் ஜூலை 22ஆம் தேதி பிறந்ததாகவும், குழந்தைக்கு கியாரா ஜோசப் (Kiara Joseph) என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “ஹலோ உலகமே… கடந்த சில நாட்கள் எங்கள் ‘குட்டி தேவதையுடன்’ புதிய வாழ்க்கையை மெதுவாக அரவணைத்து வாழ்ந்த அன்பான தருணங்களாக அமைந்துள்ளன,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

தனது கர்ப்பகால அனுபவத்தையும் ரீபா பகிர்ந்து கொண்ட அவர், கடந்த ஒன்பது மாதங்கள் தனது வாழ்க்கையில் ஒரு அதிசயமான காலமாக இருந்ததாகவும், தனது உடலுக்குள் இன்னொரு உயிர் வளர்ந்தது நினைக்கும்போது இன்னும் ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகள் கியாரா இந்த முழுப் பயணத்தையும் மிகவும் எளிதாகவும் மறக்க முடியாததாகவும் மாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இனி கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து மூவராக புதிய வாழ்க்கையை தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சி இருப்பதாகவும், கியாராவுக்கு இந்த உலகை அறிமுகப்படுத்தி எண்ணற்ற அழகான நினைவுகளை உருவாக்க ஆவலாக இருப்பதாகவும் ரெபா தெரிவித்துள்ளார்.

மேலும், வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தில் தங்களுக்காக அனைவரும் அன்பும் ஆசீர்வாதமும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்த உணர்வுபூர்வமான பதிவு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. ரெபா தனது மகள் பிறந்த செய்தியை அறிவித்த உடனேயே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கத் தொடங்கினர். பலரும் குட்டி கியாராவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை கூறியதுடன், ரீபா பகிர்ந்த குடும்பப் புகைப்படங்களையும் பாராட்டி வருகின்றனர்.

மலையாள திரைப்படங்களின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய ரீபா மோனிகா ஜான், ‘பிகில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் அவர், திருமணத்திற்குப் பிறகும் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது தனது மகள் பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள இந்த பதிவு, அவரது வாழ்க்கையின் மறக்க முடியாத மைல்கல்லாக மட்டுமல்லாமல், ரசிகர்களும் அவருடன் இணைந்து கொண்டாடும் இனிய தருணமாகவும் மாறியுள்ளது.



Source link